உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலூரில் புதிய வழித்தடத்தில் 2 பேருந்துகள்: எம்.எல்.ஏ. அய்யப்பன் துவக்கி வைத்தார்

கடலூர் : 

            புதிய வழித் தடங்களில் செல்லும் இரண்டு பஸ்களை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். 

              கடலூர் தொகுதிக்குட்பட்ட நல்லவாடு பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காகவும், கடலூரிலிருந்து புதுச்சேரி பகுதியில் உள்ள கடலூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி பொதுமக்கள் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடலூர் அரசு போக்குவரத்துக் கழகம் தடம் எண். 40 ஏ பஸ் நாள் ஒன்றுக்கு நான்கு முறை கடலூரிலிருந்து கன்னியக் கோவில் வழியாக நல்லாவாடுக்கும், தடம் எண். 40 பி புதுச்சேரி பகுதியில் உள்ள தமிழக கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கடலூரிலிருந்து திருவந்திபுரம், பில்லாலி, வெள்ளப்பாக்கம், அழகியநத்தம், வில்லியனூர் வழியாக பெரம்பைக்கு ஒரு பஸ்சையும் நேற்று முதல் இயக்கியது.

              தூக்கணாம்பாக்கத்தில் நடந்த துவக்க விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கி துவக்கி வைத்தார் .நிகழ்ச்சியில் ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், மீனாட்சி ஜெயமூர்த்தி, கவுன்சிலர் கஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன், போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் முருகானந்தம், கிளை மேலாளர்கள் கணபதி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior