கடலூர்:
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கத்தை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கெங்கம்மாள் (வயது 40). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் கலியம்மாள், சுமதி ஆகியோரும் ஏம்பலத்தில் நேற்று மாலை நடந்த காதணி விழாவுக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
இரவு 10 மணியளவில் தென்னம்பாக்கம் அழகர் கோவில் அருகே வந்த போது பின்தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி திடீரென கலியம்மாள் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினான். இதனை பார்த்ததும் கெங்கம்மாளும், சுமதியும் பயந்து ஓடிவிட்டனர்.
இதையடுத்து அந்த ஆசாமி கலியம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டான். பின்னர் கலியம்மாளிடம் இடது கை சுண்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி தரும்படி அந்த ஆசாமி கூறினார். ஆனால் கெங்கம்மாள் கழற்றி தரமறுத்து விட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் கலியம்மாளின் இடதுகை சுண்டு விரலை கத்தியால் வெட்டி மோதிரத்தோடு எடுத்து சென்று விட்டான். இதனால் கெங்கம்¢மாள் மயங்கி விழுந்தார். இதற் கிடையே நடந்த சம்பவம் குறித்து கெங்கம்மாளும், சுமதியும் கிராமத்துக்கு சென்று தெரிவித்தனர். கிராமமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.
பின்னர் மயங்கி கிடந்த கலியம்மாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விரலை துண்டித்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக