கடலூர் :
கவுன்சிலரை தாக்கிய ஊராட்சி தலைவரின் கணவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.
கடலூர் அடுத்த எம்.பி.அகரம் ஊராட்சி தலைவர் பிரேமா. இவரது கணவர் ஞானப்பிரகாசம். தி.மு.க., கிளை செயலாளர். இவருக்கும் அதே ஊராட்சியில் 3வது வார்டு உறுப்பினர் இளங்கோவனுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ஊராட்சி தலைவர் பிரேமா ஊராட்சி நிதியில் ஊழல் செய்ததாக இளங்கோவன் கலெக்டரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஊராட்சி தலைவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட் டது. அதன் அடிப்படையில் விசாரணைக்காக ஊராட்சி அலுவலத்திற்கு நேற்று காலை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.
விசாரணைக்காக இளங்கோவன் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப் போது அங்கிருந்த பிரேமாவின் கணவர் ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் அய்யனார் (தே.மு.தி.க.,) இவரது தம்பி சங்கர், மற் றும் அதே ஊரைச் சேர்ந்த வினோத், சுரேஷ், சரவணன், ஸ்ரீதர், பிரபு ஆகியோர் இளங்கோவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த இளங்கோவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் துக்கணாம்பாக்கம் போலீசார், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் அய்யனார், சங்கர், வினோத், சுரேஷ், சரவணன், ஸ்ரீதர், பிரபு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக