கடலூர்:
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக காலனியில் குடிநீர் தண்ணீர் வழங்காததால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து இதே நிலை நீடித் ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7.30 மணிக்கு தூக்கணாம்பாக்கம் கடை வீதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அதில் உடன் நடவடிக்கை எடுத்து குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 8.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக