உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 25, 2011

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா




நிறைவு விழாவில், யோகா பயிற்சி செய்து காண்பிக்கும் சிறுவர்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூரில் 20 நாள்கள் நடந்த கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா
கடலூர்:
 
        தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த, கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  
 
              கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்ற பயிற்சி முகாமில் சிறுவர் சிறுமியர் 160 பேர் கலந்து கொண்டனர். இதுதவிர கடலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் 120 பேர் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தங்கி சிறப்புப் பயிற்சி பெற்றனர்.  மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.திருமுகம் தலைமையில் சிறந்த பயிற்சியாளர்கள் இந்தப் பயிற்சிகளை அளித்தனர்.  பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு முட்டை, பால் வழங்கப்பட்டது.  
 
             பயிற்சி முகாம்கள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் ஆர். புவனேஸ்வரி தலைமை தாங்கி பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்களையும் சீருடைகளையும் வழங்கினார்.  மேலும் மாநிலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ, மாணவியருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ, மாணவியருக்குத் தலா 6500 வீதம் 22 பேருக்கு ரொக்கப் பரிசுகளையும் புவனேஸ்வரி வழங்கினார்.  யோகா பயிற்சி பெற்றவர்கள் யோகாசனங்கள் செய்து காண்பித்தனர். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 

Read more »

திங்கள், ஏப்ரல் 26, 2010

விளையாட்டு திறனை மேம்படுத்த கல்வி மாவட்ட அளவில் பயிற்சி முகாம்

 கடலூர் : 

           கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு உறைவிடமில்லா பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.
 
                உலகத் திறனாளிகளைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, கல்வி மாவட்ட அளவில் உறைவிடமில்லா பயிற்சி முகாம் நடக்கிறது.கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் முகாம் நடக்கிறது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும். அனுபவமிக்க விளையாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். கடலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள் இன்று காலை 6.30 மணிக்கு கடலூர் விளையாட்டு அரங்கில் தடகளப் பயிற்றுனர் சைமன்ராஜிடமும், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவியர்கள் விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கில் அறிவழகனை சந்தித்து முகாமில் பங்கேற்குமாறு விளையாட்டு அலுவலர் திருமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 01, 2010

புவனகிரியில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்


புவனகிரி :  

                  கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வி திட்டத் தில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக் கான பயிற்சி முகாம் நடந்தது.
 
                      வேளங்கிப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணாபுரம் பாலகணபதி, கீரப்பாளையம் தமிழ்மணி தேசிய இடைநிலை கல்விக்குழு நிதியினை கையாளுதல், கணக்குகளை பராமரித்தல், எஸ்.எம்.டி.சி.மூலம் பள்ளியில் நடைபெற வேண்டிய செயல்கள் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டபணிகள் குறித்து விளக்கினர். முன்னாள் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் மக்களின் பங்கு குறித்து பேசினார். சிதம்பரம் சுற்றியுள்ள 11 பள்ளிகளிலிருந்து தலா ஐந்து பேர் பங்கேற்றனர்.

Read more »

புதன், மார்ச் 24, 2010

முந்​திரி சாகு​படி பயிற்சி


​ விருத்​தா​ச​லம்:
 
                   விருத்​தா​ச​லம் மண்​டல ஆராய்ச்​சிப் பண்​ணை​யில் முந்​திரி சாகு​படி குறித்த பயிற்சி தொடக்க விழா அண்​மை​யில் நடை​பெற்​றது.​ வி​ருத்​தா​ச​லத்​தில் உள்ள வேளாண் மண்​டல ஆராய்ச்சி நிலை​யத்​தில் முந்​திரி சாகு​படி குறித்த 10 நாள் பயிற்சி முகாம் அண்​மை​யில் தொடங்​கி​யது.​ இதில் முந்​திரி பருப்பு மற்​றும் பழங்​க​ளின் முக்​கி​யத்​து​வம்,​​ முந்​திரி ஏற்​று​ம​தி​யில் சந்தை வாய்ப்​பு​கள் மற்​றும் வழி​மு​றை​கள் பற்​றி​யும்,​​ முந்​திரி விளைச்​சலை அதிகரிக்கச் செய்ய வேண்​டிய மேலாண்மை தொழில்​நுட்​பங்​கள் குறித்​தும் விளக்கப்பட்டது.​ 
 
                    வி​ழா​வில் தமிழ்​நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்​கு​நர் ஜெய​ராஜ் தலைமை வகித்​தார்,​​ பேரா​சி​ரி​யர் முனை​வர் மாரி​முத்து,​​ விருத்​தா​ச​லம் வேளாண் அறி​வி​யல் நிலை​யப் பேரா​சி​ரி​யர் முனை​வர் சாத்​தையா,​​ மண்​டல ஆராய்ச்சி நிலைய இணைப் பேரா​சி​ரி​யர் அனீ​சா​ராணி உள்​பட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

திங்கள், மார்ச் 22, 2010

விருத்தாசலத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா


விருத்தாசலம் : 

               விருத்தாசலம் வேளாண்மை பல்கலை கழக மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
 
                    ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெயராஜ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மாரிமுத்து வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத்தையா முந்திரி பருப்பு மற்றும் பழங்களின் முக்கியத்துவம் குறித்தும், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்தும் பேசினார். முந்திரி விளைச்சலை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து இணை பேராசிரியர் அனீசாராணி பேசினார். பேராசிரியர் ஜீவா, இணை பேராசிரியர் அம்பேத்கார், உதவி பேராசிரியர் கண்ணன் மற்றும் முந்திரி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Read more »

வியாழன், பிப்ரவரி 25, 2010

கொசு மூலம் பரவும் நோய்கள் ஒழிப்பு பயிற்சி

சிறுபாக்கம் : 

              மங்களூர் ஒன்றியத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
 
                 மங்களூர் ஒன்றிய வளாகத்தில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களை ஒழிக்கும் பயிற்சி முகாம் நேற்று  நடந்தது. மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் புஷ்பராஜ், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். மேலாளர் கண்ணன் வரவேற்றார். டாக்டர்கள் மகேஸ் வரி, பிரேம்நாத் ஆகியோர் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள், தடுப்பு வழிகள் குறித்து பயிற்சியளித்தனர். இதில் ஊராட்சி தலைவர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior