கடலூர் :
கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு உறைவிடமில்லா பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.
உலகத் திறனாளிகளைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, கல்வி மாவட்ட அளவில் உறைவிடமில்லா பயிற்சி முகாம் நடக்கிறது.கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் முகாம் நடக்கிறது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும். அனுபவமிக்க விளையாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். கடலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள் இன்று காலை 6.30 மணிக்கு கடலூர் விளையாட்டு அரங்கில் தடகளப் பயிற்றுனர் சைமன்ராஜிடமும், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவியர்கள் விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கில் அறிவழகனை சந்தித்து முகாமில் பங்கேற்குமாறு விளையாட்டு அலுவலர் திருமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக