விருத்தாசலம்:
விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சிப் பண்ணையில் முந்திரி சாகுபடி குறித்த பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விருத்தாசலத்தில் உள்ள வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி சாகுபடி குறித்த 10 நாள் பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது. இதில் முந்திரி பருப்பு மற்றும் பழங்களின் முக்கியத்துவம், முந்திரி ஏற்றுமதியில் சந்தை வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் பற்றியும், முந்திரி விளைச்சலை அதிகரிக்கச் செய்ய வேண்டிய மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஜெயராஜ் தலைமை வகித்தார், பேராசிரியர் முனைவர் மாரிமுத்து, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் முனைவர் சாத்தையா, மண்டல ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் அனீசாராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக