உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 25, 2011

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா




நிறைவு விழாவில், யோகா பயிற்சி செய்து காண்பிக்கும் சிறுவர்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூரில் 20 நாள்கள் நடந்த கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா
கடலூர்:
 
        தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த, கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  
 
              கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்ற பயிற்சி முகாமில் சிறுவர் சிறுமியர் 160 பேர் கலந்து கொண்டனர். இதுதவிர கடலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் 120 பேர் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தங்கி சிறப்புப் பயிற்சி பெற்றனர்.  மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.திருமுகம் தலைமையில் சிறந்த பயிற்சியாளர்கள் இந்தப் பயிற்சிகளை அளித்தனர்.  பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு முட்டை, பால் வழங்கப்பட்டது.  
 
             பயிற்சி முகாம்கள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் ஆர். புவனேஸ்வரி தலைமை தாங்கி பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்களையும் சீருடைகளையும் வழங்கினார்.  மேலும் மாநிலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ, மாணவியருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ, மாணவியருக்குத் தலா 6500 வீதம் 22 பேருக்கு ரொக்கப் பரிசுகளையும் புவனேஸ்வரி வழங்கினார்.  யோகா பயிற்சி பெற்றவர்கள் யோகாசனங்கள் செய்து காண்பித்தனர். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior