உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 21, 2012

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம்

நெய்வேலி:
 
       என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
         பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு மார்ச் மாத தொடக்கத்தில் கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நெய்வேலி பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயலராக இருந்த என்.இளங்கோவன், மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணபவன் அறிவித்தார். இந்த மாநாட்டின் போது, நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாகத் திகழ்ந்த ஜம்புலிங்க முதலியாருக்கு ஒரு சிலையையும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் கடவுளாகக் கருதப்படும் பொன்.முத்துராமலிங்கத் தேவருக்கும் நெய்வேலியில் சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக என்.இளங்கோவன் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், மே 30, 2011

என்.எல்.சியில். சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி:

                  என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

* என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்தை அமுல்படுத்த வேண்டும்.

* அலுவலக பணி நேரம் மாற்றத் திட்டத்தை நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

* இரவு பணியில் வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு, அதிகாரி களுக்கு இணையாக ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தி தர வேண்டும்.

* இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 15 ஆண்டு கள் பணி முடித்தவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.

* போனஸ்- இன்சென்டிவ் அலவன்ஸ்களில் வித்தி யாசம் இல்லாமல் அதிகாரி களுக்கு இணையாக வழங்க வேண்டும்.

* உணவக தொழிலாளர்களின் பதவி உயர்வை சரி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
 
 

Read more »

வியாழன், அக்டோபர் 28, 2010

முடிவுக்கு வந்தது என்எல்சி ஸ்டிரைக்

நெய்வேலி:

                     என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக நிர்வாகத்திற்கும், அதன் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கமான தொமுசவிற்கும் இடையே சென்னையில் புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொமுச, என்எல்சி நிர்வாகத்துடன் அக்டோபர் 10-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டது.  ஆனால், இதர தொழிற்சங்கங்களான பாமக தொழிற்சங்கம், ஏஐடியுசி, அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு, எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கைத் தொடர்ந்தன.  

               போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பாமக எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பிரச்னைக்கு தீர்வுகாண உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.   இதையடுத்து முதல்வர் முயற்சி மேற்கொண்டு மத்திய அரசுடன் பேசி, என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததையடுத்து, புதன்கிழமை சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

                      இப்பேச்சுவார்த்தையில் நாளொன்றுக்கு  ரூ. 40- ஆக இருந்த ஊதியம் ரூ. 60 ஆகவும், சிறப்பு போனஸ் ரூ. 500-லிருந்து ரூ. 1000-ஆகவும் உயர்த்தப்பட்டது. இதர கோரிக்கைகள் ஏற்கனவே தொமுசவுடன் செய்துகொண்டது தொடரும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து 38 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சிஐடியு சங்கத் தலைவர் குப்புசாமி தெரிவித்தார். வேலைநிறுத்தம் வாபஸ் எனக் கூறப்பட்டாலும் 65 சதவீத தொழிலாளர்கள் ஏற்கெனவே பணிக்குத் திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more »

புதன், ஆகஸ்ட் 25, 2010

என்.எல்.சி. புதிய ஊதிய விகித ஒப்பந்தம் நாளை கையெழுத்து

நெய்வேலி:

              என்எல்சி தொழிலாளர்களுக்கான புதிய ஊதியமாற்று வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இதுநாள் வரை புதிய ஊதிய விகிதம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை கிடைக்காமல் தொழிலாளர்கள் விரக்திக்கு ஆளாகியுள்ளனர்.

              இந்நிலையில் வியாழக்கிழமை, மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் புதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் கிடைக்கும் என்ற ஆவலில் தொழிலாளர்கள் உள்ளனர். என்எல்சி தொழிலாளர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய விகித அடிப்படையில் ஊதியம் வழங்கவேண்டும் என்று நிறுவனத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

                  இதையடுத்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கத்தினருடன் நிர்வாகம் பலசுற்று பேச்சு நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து ஜூன் 31 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜூலை 5-ல் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

                             இருப்பினும், தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு, இறந்தோரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, டெக்னிக்கல் சொசைட்டி குறித்து நிர்வாகத்தினருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சு நடத்திவந்தனர். இதனிடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு 2 மாதமாகியும் இதுவரை புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் சம்பளமும், நிலுவைத்தொகையும் கிடைக்காததால் தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். செப்டம்பர் மாதத்திலாவது புதிய சம்பளம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள் கூறுகையில், 

                       ""திங்கள்கிழமை நிறுவன நிர்வாகத்துறை இயக்குநர் தேர்வு நடைபெற்றதால் நிறுவனத் தலைவர் வெளியூர் செல்ல நேரிட்டது. புதன்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் வெளியூர் செல்வதால், வியாழக்கிழமை சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறோம். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டால் செப்டம்பர் 2-ம் தேதி நிலுவைத்தொகையும், புதிய ஊதியமும் கிடைக்கும்'' என்றார் பெருமாள்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் ஆதரவு


நெய்வேலி: 

           என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓட்டளித்துள்ளனர்.

          என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, கடந்த 7ம் தேதி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையப் பகுதிகளில் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது அவசியமா அல்லது வேண்டாமா என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஓட்டெடுப்பு நடத்தினர். இதில் பெரும்பாலானோர், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து ஓட்டளித்தனர். 

             இதன் எதிரொலியாக, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது குறித்தும், வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பது குறித்தும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகக் குழுவைக் கூட்டி முடிவெடுக்க உள்ளனர்.

Read more »

திங்கள், ஜூலை 26, 2010

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் என்எல்சி தொழிலாளர்கள்

நெய்வேலி:

              வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் காலாண்டு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் மீண்டும் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

           புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஜூன் 2-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கத்தினர் ஜூன் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே ஜூலை 5-ம் தேதி ஏற்பட்ட ஊதியமாற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக காலவரையற்ற போராட்டம் ஜூலை 5-ம் தேதி இரவு முடிவுக்கு வந்ததையடுத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

          இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் 2-வது காலண்டிற்கான ஊக்க ஊதியம் வழங்கப்படும். அதன்படி சனிக்கிழமை ஊக்க ஊதியம் வழங்குவதற்கான ஆணையை நிர்வாகம் பிறப்பித்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அந்த ஆணையில், ""அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்கள் ஜூன் 2 மற்றும் 30-ம் தேதி நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலாண்டு ஊக்க ஊதியம் பெற தகுதியற்றவர்கள்'' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் சுமார் 4 ஆயிரம் பேர் ஊக்க ஊதியம் பெற முடியாத நிலை ஏற்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் ஜூலை மாதமும் போராட்டத்தை தொடர்ந்ததால் 3-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். இதையடுத்து தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

             அதன்படி ஜூலை 26, 27 தேதிகளில் விதிப்படி வேலை என்ற போராட்டமும், 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை என்எல்சி தலைமை அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்தவுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior