உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மறியல் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறியல் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 17, 2011

கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

கடலூர்:'

             கடலூரில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 82 பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். 

              விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சேமிப்புக் கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும் தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை 3 பிரிவாக பிரிக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ரேஷன் பொருள்களுக்குப் பதில் பணமாகத் தரும் ஆலோசனையைக் கைவிட வேண்டும் என்று கோரியும் மறியல் போராட்டம், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது. 

                 கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் பி.ஜான்ஸி ராணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எஸ்.லட்சுமி, என்.ஆனந்தி, ஏ.ரஜியாபேகம், கே.அன்புச்செல்வி உள்ளிடடோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வி.மேரி, மாவட்டத் தலைவர் ஆர்.சிவகாமி, பொருளாளர் பி.தேன்மொழி, துணைச் செயலாளர் எம்.ஜெயசித்ரா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மறியலில் ஈடுபட்ட 82 பெண்களை போலீஸôர் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 









Read more »

வியாழன், பிப்ரவரி 17, 2011

106 தமிழக மீனவர்கள் கைது: கடலூரில் மறியல் நடத்திய எம்.எல்.ஏ. உள்ளிட்ட 500 பேர் கைது

கடலூர்:

          கடலூர் துறைமுக அலுவலகம் முன் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்திய, கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் உள்ளிட்ட 500 பேரைப் போலீஸôர் கைது செய்தனர்.  

          இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த, நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 106 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து, தி.மு.க.வினர் தமிழக துறைமுக அலுவலகங்கள் முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

              கடலூர் துறைமுகம் முன் மறியல் போராட்டம் நடத்துவதற்காக, ஏராளமான தி.மு.க.வினர் குவிந்தனர். அவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வாழ்த்தி வழியனுப்பினார்.  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர அவைத் தலைவர் நாராயணன், இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.

Read more »

செவ்வாய், டிசம்பர் 28, 2010

கடலூரில் மறியல் போராட்டம் நடத்திய 600 ஆசிரியர்கள் கைது


கடலூர்:

               மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஊர்வலமாக சென்றனர்.

            கடலூர்-புதுவை சாலையை அடைந்த போது ஊர்வலத்தில் வந்த ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் முருகேசன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் அப்துல்மஜித் உள்பட சுமார் 400 பேரை கைது செய்தனர்.

Read more »

திங்கள், ஜூன் 28, 2010

பண்ருட்டியில் டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., மறியல்: 38 பேர் கைது

பண்ருட்டி : 

                 பண்ருட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ.,வினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று காலை பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வட்ட செயலாளர் சேதுராஜன் தலைமை தாங்கினார். மறியலில் நகர செயலாளர் மோகன், முன்னாள் நகர செயலாளர் அர்ச்சுனன் உள்ளிட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 38 பேர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் பாண்டியன் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை கண்டித்து ஜூலை 20-ல் ஆர்ப்பாட்டம் பிற்படுத்தப்பட்டோர் பேரவை தீர்மானம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 

                  இதைக் கண்டித்து வரும் ஜூலை 20-ல் சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சிதம்பரத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டச் செயலாளர் வீரவன்னியவேங்கன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ராஜா வரவேற்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா (படம்) பங்கேற்று சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்டத் தலைவர் தியாகவள்ளி தனசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் அரங்கபாஸ்கர், தொழிற் சங்க அமைப்பாளர் கோதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: 

                         ஜூன் 23-ம் தேதி கோவையில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் 100 வாகனங்களில் சென்று பங்கேற்பது; நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டுவது; பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தலை ஜூலை 30-ல் நடத்துவது, சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கு படிக்க வரும் மாணவர்களுக்காகவும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கம்யூ., கட்சிகள் மறியல்


கடலூர்: 

                         விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கடலூர் மாவட்டத் தில் 13 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர் 1252 பேரை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட் களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும். பொது வினியோக முறையை வலுப்படுத்த வேண்டும்.

                         தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., மற்றும் இந்திய.கம்யூ,.கட்சியின் சார்பில் தமிழகத்தின் முக்கிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என றிவிக்கப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கம்யூ.,கட்சிகள் 13 இடங்களில் மறியல் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். நேற்று காலை கடலூர் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாரதிரோடு வழியாக மஞ்சக் குப்பம் தலைமை தபால் நிலையத்திற்கு சென்று மறியல் செய் தனர். இந்திய கம்யூ., வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். சுப்புராயன் முன் னிலை வகித்தார். மாநில செயற் குழு சவுந்தரராஜன் , மாநில குழு தனசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம், ஒன்றிய செயலாளர் மாதவன், வட்ட குழு சம்பந்தம் உள்பட மறியலில் ஈடுபட்ட 194 பேரை கடலூர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். 

                        பெண்ணாடத்தில் ராஜேந்திரன் தலைமையில் 82 பேரும், சிதம்பரத்தில் நகர செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 92 பேரும், காசிலிங்கம் உள்பட 54 பேரும், புவனகிரியில் கற்பனைச் செல்வன் தலைமையில் 112 பேரும், விருத்தாசலத்தில் வட்ட குழு கந்தசாமி தலைமையில் 128 பேரும், மந்தாரக்குப்பத்தில் முத்துவேல் தலைமையில் 88 பேரும், குறிஞ்சிப்பாடியில் ராஜ் தலைமையில் 81 பேரும், ஸ்ரீமுஷ் ணத்தில் வட்ட துணை செயலாளர் ராஜ் தலைமையில் 22 பேரும், காட்டுமன்னார்கோவிலில் வட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 63 பேரும், பண்ருட்டியில் மா.கம்யூ., வட்ட செயலாளர் சேதுராமன், இந்திய கம்யூ., கட்சி துரை தலைமையில் 250 பேரும், நடுவீரப்பட்டில் மா.கம்யூ., தட்சிணாமூர்த்தி தலைமையில் 31 பேரும், திட்டக்குடியில் வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் 55 பேர் உட்பட மொத்தம் 242 பெண்கள் உட்பட 1252 பேரை போலீசார் கைது செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior