கடலூர்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கடலூர் மாவட்டத் தில் 13 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர் 1252 பேரை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட் களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும். பொது வினியோக முறையை வலுப்படுத்த வேண்டும்.
தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., மற்றும் இந்திய.கம்யூ,.கட்சியின் சார்பில் தமிழகத்தின் முக்கிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என றிவிக்கப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கம்யூ.,கட்சிகள் 13 இடங்களில் மறியல் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். நேற்று காலை கடலூர் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாரதிரோடு வழியாக மஞ்சக் குப்பம் தலைமை தபால் நிலையத்திற்கு சென்று மறியல் செய் தனர். இந்திய கம்யூ., வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். சுப்புராயன் முன் னிலை வகித்தார். மாநில செயற் குழு சவுந்தரராஜன் , மாநில குழு தனசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம், ஒன்றிய செயலாளர் மாதவன், வட்ட குழு சம்பந்தம் உள்பட மறியலில் ஈடுபட்ட 194 பேரை கடலூர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
பெண்ணாடத்தில் ராஜேந்திரன் தலைமையில் 82 பேரும், சிதம்பரத்தில் நகர செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 92 பேரும், காசிலிங்கம் உள்பட 54 பேரும், புவனகிரியில் கற்பனைச் செல்வன் தலைமையில் 112 பேரும், விருத்தாசலத்தில் வட்ட குழு கந்தசாமி தலைமையில் 128 பேரும், மந்தாரக்குப்பத்தில் முத்துவேல் தலைமையில் 88 பேரும், குறிஞ்சிப்பாடியில் ராஜ் தலைமையில் 81 பேரும், ஸ்ரீமுஷ் ணத்தில் வட்ட துணை செயலாளர் ராஜ் தலைமையில் 22 பேரும், காட்டுமன்னார்கோவிலில் வட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 63 பேரும், பண்ருட்டியில் மா.கம்யூ., வட்ட செயலாளர் சேதுராமன், இந்திய கம்யூ., கட்சி துரை தலைமையில் 250 பேரும், நடுவீரப்பட்டில் மா.கம்யூ., தட்சிணாமூர்த்தி தலைமையில் 31 பேரும், திட்டக்குடியில் வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் 55 பேர் உட்பட மொத்தம் 242 பெண்கள் உட்பட 1252 பேரை போலீசார் கைது செய்தனர்.
downlaod this page as pdf