உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை கண்டித்து ஜூலை 20-ல் ஆர்ப்பாட்டம் பிற்படுத்தப்பட்டோர் பேரவை தீர்மானம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 

                  இதைக் கண்டித்து வரும் ஜூலை 20-ல் சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சிதம்பரத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டச் செயலாளர் வீரவன்னியவேங்கன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ராஜா வரவேற்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா (படம்) பங்கேற்று சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்டத் தலைவர் தியாகவள்ளி தனசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் அரங்கபாஸ்கர், தொழிற் சங்க அமைப்பாளர் கோதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: 

                         ஜூன் 23-ம் தேதி கோவையில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் 100 வாகனங்களில் சென்று பங்கேற்பது; நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டுவது; பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தலை ஜூலை 30-ல் நடத்துவது, சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கு படிக்க வரும் மாணவர்களுக்காகவும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior