கடலூர்:
கடலூர் துறைமுக அலுவலகம் முன் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்திய, கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் உள்ளிட்ட 500 பேரைப் போலீஸôர் கைது செய்தனர்.
இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த, நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 106 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து, தி.மு.க.வினர் தமிழக துறைமுக அலுவலகங்கள் முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் துறைமுகம் முன் மறியல் போராட்டம் நடத்துவதற்காக, ஏராளமான தி.மு.க.வினர் குவிந்தனர். அவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வாழ்த்தி வழியனுப்பினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர அவைத் தலைவர் நாராயணன், இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக