பண்ருட்டி, டிச. 15:
மழைக்குக் கூட பயணிகள் ஒதுங்கி நிற்க இடமில்லாத அவல நிலையில் பண்ருட்டி பஸ் நிலையம் உள்ளது. இதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை வலியுறுத்தியும் நகர நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர். க டலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் முந்திரி ஏற்றுமதி நிறுவனங்கள், மளிகைப் பொருள்கள் மொத்த வியாபார கடைகள் உள்ளிட்ட முக்கிய கடைகள் இயங்கி வருகின்றன.÷இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வெளி ஊர்களில் இருந்து வியாபார விஷயமாக பண்ருட்டிக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் இதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள பண்ருட்டிக்குதான் வர வேண்டும். மேலும் சென்னை, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், பேராவூரணி,பட்டுக்கோட்டை, கடலூர், புதுச்சேரியில் இருந்து திருப்பதி, வேலூர், பெங்களூர், எர்ணாக்குளம், கண்ணனூர், மேட்டூர், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பண்ருட்டி வழியாகத்தான் செல்ல வேண்டும்.÷இதனால் பண்ருட்டி பஸ் நிலையம் எப்போது பரபரப்பாகவும், பயணிகளின் கூட்டம் அதிகமாகவும் காணப்படும்.÷இத் தகைய முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட நிழற்குடை இடத்தை தரைக் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து பழக்கடைகள் வைத்துள்ளனர்.
இதனால் பயணிகள் நிற்கவோ, அமரவோ இடமின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் இக்கடைகளால் வீசப்படும் பழக் கழிவுகளை சாப்பிடுவதற்காக சுமார் 25-க்கும் மேற்பட்ட மாடுகள் பஸ் நிலையத்தை சுற்றி திரிந்து வருகின்றன.
இதனால் பஸ்கள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த முடியாத சூழலும், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.÷இது குறித்து பல முறை செய்திகள் வெளியிட்டும், நகர மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியும், காவல் நிலையத்தில் நடைபெற்ற போக்குவரத்து சீரமைப்பு கூட்டத்தில் பேசியும் பலன் இல்லை.
மேலும் நிழற்குடையின் மத்தியில் மழை நீர் செல்ல அமைக்கப்பட்ட தகரம் துருப்பிடித்து ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதால் மழை நீர் ஒழுகுகிறது. இதனால் மழைக் காலத்தில் ஒழுகும் நிழற்குடையின் கீழ் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கும், சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு மத்தியில் பயணிகள் பாதுகாப்பின்றி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக