உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

இன்று உலக சுற்றுசூழல் தினம்: பல்லுயிர் பெருக்கம்- சூழலியல் மேலாண்மை கடைபிடிப்பு



             
                  உலகச் சுற்றுச்சூழல் தினம், இந்த ஆண்டு பல்லுயிர் பெருக்கம்-சூழலியல் மேலாண்மை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சனிக்கிழமை (ஜூன் 5) கடைப்பிடிக்கப்படுகிறது.
                       ஒரே விதமான சூழலில் பல்வேறு வகை உயிரினங்கள் ஓர் இடத்தில் சேர்ந்து வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் நோக்கமே பல்லுயிர் பெருக்கம்-சூழலியல் மேலாண்மை ஆகும். உலகில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிலம், நீர், காற்று உள்பட அனைத்து வகையிலும் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுகிறது. இதிலும் குறிப்பாக 1989-ம் ஆண்டு முதல் புவிவெப்பமயமாதல் என்ற நிகழ்வு உலத்தை அச்சுறுத்தி வருகிறது. 
                   சுற்றுச் சூழல் பாதிப்புக்கு மக்கள் தொகை பெருக்கமே பெரும் சவாலாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.31.5.2010 கணக்குப்படி உலக மக்கள் தொகை 682 கோடி என்றும், அதிகபட்சமாக சீனாவில் 133 கோடி, இந்தியாவில் 118 கோடி, அமெரிக்காவில் 30 கோடி, இந்தோனேசியாவில் 23 கோடி, பிரேசிலில் 19 கோடி, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் 16 கோடி மக்கள் தொகை உள்ளதாக ஐக்கியநாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலக மக்கள் தொகை பெருக்கம்தான் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று 1970-களிலேயே ஒரு ஆய்வு எச்சரித்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் 1974-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி, முதன் முதலாக உலக சுற்றுச் சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணிகளை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கருப்பொருள் பிரதானப்படுத்தப்பட்டது. மேலும் இது குறித்து அந்தந்த நாட்டு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior