உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு யோசனை

          அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படாவிட்டால், அரசு தலையிட நேரிடும் என முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். 

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி காலத்தை 9 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்திருப்பதை எதிர்த்தும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஓய்வு ஊதியதாரர்கள் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழு புதன்கிழமை சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் முதன்மை செயலர் கணேசன் ஆகியோரைச் சந்தித்து இதுதொடர்பாக புகார் மனு ஒன்றையும் கொடுத்தது.

                 இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன், அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அப்போது, பல்கலைக்கழக நிர்வாகத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கூட்டு நடவடிக்கை குழுவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும். இதன் மூலம் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், அரசு தலையிட நேரிடும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior