உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

கடலூர் கடற்கரையில் கிடந்த சாமி சிலைகள்


கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 3 நாள்களாக காணப்படும் கிருஷ்ணர். வெங்கடாசலபதி சிலைகள்.
 
கடலூர்:

         கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் இரு சாமி சிலைகள் கடந்த 3 நாள்களாக கிடந்தன.  முழு வடிவத்தில் கிருஷ்ணர் சிலை மற்றும் தலை பகுதி மட்டும் உள்ள வெங்கடாசலபதி சிலை ஆகிய இரு சிலைகளும் கேட்பாரற்றுக் கிடந்தன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையால் செய்யப்பட்ட அவற்றை, கடற்கரையில் கொண்டு வந்து போட்டது யார் என்று தெரியவில்லை.  சாமி சிலைகளைப் பார்த்ததும் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பலர் அவற்றைப் பக்தியுடன் வணங்கிவிட்டு சென்றனர்.  இந்த நிலையில் புதன்கிழமை கடல் 50 மீட்டர் தூரம் உள்வாங்கிக் காணப்பட்டது. கடல் இயல்பான நிலையில் இருந்து இருந்தால், சாமி சிலைகளை அலைகள் அடித்துச் சென்று இருக்கக்கூடும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior