கடலூர் வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கடலூர் வாசிப்போர் இயக்கம் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
வாசிப்போர் இயக்கத் தலைவரும் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருமான ஆர்.நடராஜன் எழுதிய, ஒரு தோழியின் கதை, நவீன பஞ்ச தந்திரக் கதைகள், நம்பர் பூதம் (மொழி பெயர்ப்பு), பெடரிக் டக்ளஸ் (மொழி பெயர்ப்பு), அறிவியல், வளர்ச்சி... வன்முறை (மொழி பெயர்ப்பு) ஆகிய 5 நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.
புத்தகங்களை பள்ளி மாணவச் சிறுவர் சிறுமியர் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட நூலக அதிகாரி த.வெல்லஸ் ரோஸ் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகங்களை முறையே ஆசிரியை கேத்தரின், எல்.ஐ.சி. ஜெயஸ்ரீ, பேராசிரியை சாந்தி, எழுத்தாளர் வளவ துரையன், அறிவியல் விமர்சகர் வைத்தியலிங்கம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்துப் பேசினர்.÷நிகழ்ச்சிக்கு வெல்லஸ் ரோஸ் தலைமை வகித்தார். வாசிப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி முன்னிலை வகித்து தொகுத்து வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக