சிதம்பரம் :
சிதம்பரத்தில் வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்டக்குழு அவரசக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயதேவன் வரவேற்றார். கோவலன், அருள் மொழிவர்மன், பன்னீர், சுந்தரேசன், ராஜசுந்தரம் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வு செய்தவர்களின் பெயர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்வது.
2010-2011ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 158 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மத்திய அரசின் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் உடன் நியமிக்க அரசை கேட்டுக்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவக்குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக