உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15000 ஊதியம் வேண்டும்: சிஐடியு கோரிக்கை

நெய்வேலி:

                என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நெய்வேலி சிஐடியு தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 

                    என்எல்சி உற்பத்தியில் சரிபாதி உழைப்பை செலுத்திவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் மிக குறைவானதே. இவர்களின் உழைப்பால் நிறுவனம் ஆண்டுக்காண்டு அதிக லாபங்களை ஈட்டிவருகிறது. நிறுவன வளர்ச்சிக்கு பங்காற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, நிரந்தரத் தொழிலாளர்களின் கடைநிலை ஊதியத்தையாவது அளிப்பதுதான் நியாயமானது. ஆனால் அவ்வாறு வழங்க என்எல்சி மறுக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தப் பணியாற்றிடும் இவர்களின் உழைப்பைப் பயன்படுத்தி நிர்வாகம் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகிறது.

                     எனவே ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யும் வரை, அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் வகையில் மாதம் (ரூ.9800 ஈஅ) ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அச்சங்கத்தின் நிர்வாகிகள் குப்புசாமி, வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior