உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

கடலூரில் மழையில் ஒழுகிய அரசு பஸ் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோர்ட் உத்தரவு

கடலூர்:

                        மழையில் அரசு பஸ் ஒழுகியதால், அதில் பயணம் செய்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலருக்கு, 2 ஆயிரம் இழப்பீடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிப்பவர் ராமமூர்த்தி. மாவட்ட நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 30-11-2008 அன்று ராமமூர்த்தி, கடலூரில் இருந்து புதுவைக்கு, அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மழை பெய்தது.

                 பஸ்ஸின் ஷட்டர் மற்றும் கூரை சேதம் அடைந்து இருந்ததால், மழை நீரில் ராமமூர்த்தி நனைய நேரிட்டது. இதுபற்றி புகார் செய்தபோது நடத்துநர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ராமமூர்த்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன், மனரீதியாகவும் பாதிக்கப் பட்டார்.÷எனவே இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக, நிர்வாக இயக்குநர் மற்றும் கடலூர் கிளை மேலாளருக்கு புகார் மனு அனுப்பியும், அவர்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை. எனவே கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை மூலமாக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமமூர்த்தி சார்பில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார். 

                 வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்பு கூறினர். அரசு போக்குவரத்துக் கழகமும், பஸ் நடத்துநரும் அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளதால், அரசு பஸ்ஸில் சேவைக் குறைபாடு உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகத்தின் பச 32 ச 2256 என்ற பதிவு எண் கொண்ட அந்த பஸ்சை , கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக அந்த பஸ்ûஸ சரிசெய்து, அனைத்து இருக்கைகளும் பயணம் செய்யத் தகுதியானவைகளாக மாற்ற வேண்டும். 

                        ராமமூர்த்திக்கு சேவைக் குறைபாட்டுக்காகவும் மன உளைச்சலுக்காகவும் நஷ்டஈடாக 1000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக 1000, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், 2 மாதங்களில் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior