கடலூர் :
வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் பயிறு வகை பயிர்களின் உற்பத் தியை பெருக்க சிறப்புத் திட்டத்தின் கீழ் குமராட்சி மற்றும் விருத்தாசலம் வட்டாரங்களில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் 6 மாதத்திற்கு வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாத சம்பளம் 8,000 ரூபாய்.
மேற்கண்ட பணிக்கு விருப்பம் உள்ள பி.எஸ். சி., (விவசாயம்) பட்டதாரிகள் வரும் 18ம் தேதிக் குள் தங்களது விண்ணப் பங்களை கடலூர் செம்மண்டலம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். குமராட்சி மற்றும் விருத்தாசலம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக