உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 20, 2010

கடலூர் மாவட்டத்தில் 20,769 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடலூர்

                   கடலூர் மாவட்டத்தில் 20,769 மாணவ-மாணவி களுக்கு இந்தாண்டு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசச்ர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.

               தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசியது:-


                   குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வடலூர், குறிஞ்சிப்பாடி, கருங்குழி, ஆண்டார்முள்ளிப்பள்ளம், கட்டியாங்குப்பம், குள்ளஞ் சாவடி ஆகிய கிராமங்களில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 9,680 மாணவர்களுக்கும், 11,080 மாணவிகளுக்கும் ஆக 20,769 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன.
 

                  கடலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 68,615 பள்ளி மாணவ-மாணவி களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதைபோல் இலவச கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 29 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளி களாகவும், 81 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 27 தொடக்கப்பள்ளிகள் நடு நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

                   குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்கிறார்களா என்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் காவல்துறை மற்றும் அலுவலர்களும் பள்ளிகளில், பள்ளி மாணவ-மாணவிகளை கண்காணிக்க வேண்டும். மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

                   முதன்மை கல்வி அலுவலகர் அமுதவள்ளி, மாவட்ட கல்வி அலுவலர் பார்வதிமணி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சித்தலைவர் தையல்நாயகி, செய்தி மக்கள் தொட்பு அலுவலர் முத்தையா, கல்விக்குழு தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior