கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்குமாறு நகராட்சி மூலம் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சி பகுதிகளில் 324 தெருக்களில் 132.875 மீட்டர் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு இதுவரை 292 தெருக்களில் 122.975 மீட்டர் நீளம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 32 தெருக்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 31.12.2010-ம் தேதிக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சி மூலம் இந்த 292 தெருக்களில் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை 163 சாலைகள் அமைக்கும் பணி பல்வேறு திட்டக்கூறுகளின் கீழ் 45.34 கி.மீ. தூரம் நிறைவடைந்துள்ளது. மீதம் 129 சாலைகள் 77. 641 மீட்டர் உள்ளதில் முதற்கட்டமாக 32 சாலைகள் 19.12 கி.மீ தூரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டுள்ளது. அரசு சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.10.18 கோடி அனுமதிக்கப்பட்டதில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
2-ம் கட்டமாக 75 சாலைகள் அமைப்பதற்கு ரூ.10.32 கோடி நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மீதமுள்ள 22 சாலைகள் நகராட்சியின் சுயநிதி மூலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் உள்ள 292 சாலைகள் அமைக்கும் பணி எதிர்வரும் 28.02.2011-க்குள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய தெருக்களான வண்டிப்பாளையம் ஸ்டேட் பாங்க் காலனியில் சாலை அமைப்பதற்கு ரூ.10 லட்சம் மாவட்ட கலெக்டரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அரசு தலைமை பொது மருத்துவமனையிலிருந்து சுற்றுலா மாளிகை வரை சாலை அமைப்பதற்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிவுற்றவுடன் இச்சாலை பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் திருவந்திபுரம் சாலையில் பிள்ளையார் கோவிலிலிருந்து கூத்தப்பாக்கம் வரை சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாக அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். அதுவரை தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற ஆவன செய்யப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சி பகுதியில் தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளும், சாலை அமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் செய்து முடித்திடுமாறு நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக பேரணி, ஆர்ப்பாட்டம், கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் செய்வதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக