உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 20, 2010

நெய்வேலியில் குடிநீருக்கு பரிதவிக்கும் மேற்கிருப்பு கிராம மக்கள்

நெய்வேலி: 

             நெய்வேலியை அடுத்த மேற்கிருப்பு கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் பழுதாகியதால், அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக குடிநீருக்காக பரிதவித்து வருகின்றனர்.

               கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சிக்குட்பட்ட மேற்கிருப்பு கிராமத்தில், மேற்கு பகுதி குளக்கரையில் ஒன்றியம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் நீரிறைத்து, அதை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேமித்து அப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

                 இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் மின்மோட்டார் திடீரென பழுதாகியதால், நீரிறைக்கும் பணி தடைபட்டது. இதையடுத்து கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.எம்.பத்மாமணியிடம் முறையிட்டதாகவும், அவர் சரியான பதில் கூறாததால், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டதாகவும் கூறுகின்றனர்.

                      வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கமோ, மின்மோட்டாரை சரிசெய்யத் தேவையான நிதி இருப்பில் உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் ஒத்துழைத்தால் அந்த நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மின்மோட்டார் பழுது குறித்தும், நிதி குறித்தும் யாரும் அலுவலகத்தை நாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

                கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், இதேபோன்று மின்மோட்டார் பழுதானபோது,கிராம இளைஞர்கள்  ஊர் மக்களிடம் பணம் வசூலித்து, மின்மோட்டரை சரிசெய்து குடிநீருக்கு ஏற்பாடு செய்தனர். தற்போது ஒன்றிய அலுவலகத்தில் இதற்கான நிதி இருந்தும் அதை பயன்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் தயங்குவது ஏன் என்பது தான் கிராம மக்களின் கேள்வி.

இதுகுறித்து, ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மணி கூறுகையில், 

                        ""பம்ப் ஆப்ரேட்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால், மோட்டார் பழுதுநீக்கும் பணி தாமதமானது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் மோட்டார் பழுது நீக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior