உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 20, 2010

மழைக் காலம்; கடலூர் மக்களுக்கு சோதனைக் காலம்

கடலூர்:

                இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை காலம், கடலூர் மக்களுக்குப் பெரும் சோதனைக் காலமாக அமைந்து உள்ளது.

                  கடலூர் மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதால், மழைக் காலம் சோதனைக் காலமாக மாறியிருக்கிறது. கடலூர் நகரில் முக்கிய நகராட்சித் தெருக்கள், பிரதான மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் சிதைந்துக் கிடக்கின்றன.

                பாதாளச் சாக்கடைத் திட்டத்தைப் பொறுத்தவரை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்னாக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அறிக்கைகள், செய்தித்தாள்களின் கண்டனங்கள் அனைத்துக்கும் இங்கு எந்த மரியாதையும் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.பாதாளச் சாக்கடைத் திட்ட பள்ளங்களால் நிகழ்ந்த விபத்துகளில், இதுவரை 8 பேர் இறந்துள்ளனர்.

                300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இரு சக்கர வாகனங்களும் 4 சக்கர வாகனங்களும் பெருத்த சேதங்களுக்கு உள்ளாகின்றன. நகரில் உள்ள 45 வார்டுகளில் 32 வார்டுகளில் மட்டுமே பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டதும், டெபாசிட் தொகையாக சில ஆயிரங்கள் செலுத்த வேண்டும், மாதாமாதம் ஒரு தொகையை சாக்கடை வரியாகவும் செலுத்த வேண்டும். 

                   இத்தகைய நிலையைப் பார்க்கும் ஏனைய 13 வார்டு மக்களும், எங்களுக்கு இந்தத் திட்டம் வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். சிதைந்துக் கிடக்கும் சாலைகள், இருண்டுக் கிடக்கும் தெருக்களைக் கண்டு பயந்து, ஆட்டோக்கள், வாடகைக் கார்கள் பல நகர்களுக்கு வருவதே இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவர்களை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவரும் பெற்றோரும் தினம் தினம் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior