உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 16, 2010

வெலிங்டன் கடைகால் ஓடை பாலம் : 20 கிராமங்கள் துண்டிக்கும் அபாயம்

திட்டக்குடி :

                 திட்டக்குடி அருகே பழுதடைந்த வெலிங்டன் கடைகால் ஓடை பாலம் இடிந்து விழுந்தால் 20 கிராம மக்களுக்கு போக் குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  திட்டக்குடியிலிருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் 20 கிராம மக்களின் நலன் கருதியும், விவசாயத்திற்கான போக்குவரத்தினை கருத்தில் கொண்டும் வெலிங்டன் கடைகால் வாய்க்காலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிறிய பாலம் கட்டப் பட்டது.
 
                தாலுகாவின் தலைமையிடமான திட்டக்குடியில் தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஜவுளி, ஜூவல்லரி உட்பட ஏராளமான வர்த் தக நிறுவனங்கள் இயங்கி வருவதால் இப்பாலம் வழியே வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

                     திட்டக்குடியை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அன்றாட அலுவலக பணிகளுக்கு இப்பாலம் வழியே வந்து செல்கின்றனர். மேலும், குமாரை கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற பூமாலையப்பர் சுவாமி கோவிலுக்கு ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் வரும் பக்தர்கள் வாகனங்களும் அதிகரித்துள்ளது. இவ்வழியாகச் செல்லும் சாலை நெடுங்குளம், செவ்வேரி, குமாரை கிராமங்களை கடந்து வேப்பூர் வரை செல்கிறது. வெலிங்டன் கடைகால் ஓடை பாலம் வழியாக விவசாயிகள் தங்களது விளை பொருட்களான நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்டவைகளை திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு செல்கின்றனர்.

                     தொடர் மழை, அதிகளவு வாகனங்களின் இயக்கத்தால் பாலம் வலுவிழந்தது. பாலத்தில் தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் தற்போது மிகவும் பலவீனமடைந்து இருபுறமும் கற்கள் பெயர்ந்தும், மேல்புறம் குண்டும், குழியுமாகி உள்ளது. வலுவிழந்த பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது இடிந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் மட்டுமின்றி செவ்வேரி, புல்லூர், குமாரை, நெடுங்குளம் உட்பட 20 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே  மக்களின் நலனை கருதி போர்க்கால அடிப்படையில் மாற்று வழி ஏற்பாடு செய்து பாலத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior