உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 16, 2010

பி.எஸ்.என்.எல்., தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு இலவசம்

கடலூர் : 

              பி.எஸ்.என்.எல்., தரைவழி மற்றும் வில் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ். என்.எல்., ப்ரீபெய்டு சிம்கார்டு  இலவசமாக வழங்கப்படும் என கடலூர் தொலை தொடர்பு மாவட்ட பொது மேலாளர் மார்ஷல் லியோ ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடலூர் தொலை தொடர்பு மாவட்ட பொது மேலாளர் மார்ஷல் லியோ ஆண்டனி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                 கடலூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய கடலூர் தொலை தொடர்பு மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., தரைவழி மற்றும் வில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பி.எஸ்.என்.எல்., ப்ரிபெய்டு கார்டு "என் நண்பன் சூப்பர்' என்னும் சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பி.எஸ். என்.எல்., ஊழியர்கள் நேரிடையாக சென்று சிம்கார்டுகளை வழங்குவார்கள். அவ்வாறு வரும் ஊழியர்கள் கொண்டு வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையின் நகல் மற்றும் விலாசத்திற்கான சான்றிதழ் நகல்களை கொடுக்க வேண்டும்.
                 விண்ணப்பங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வந்தவுடன் சிம்கார்டு இயக்கப்பட்டு வேலை செய்யத் துவங்கும். 66 ரூபாய் மதிப் புள்ள சிம்கார்டு மற்றும் முதல் ரீசார்ஜ் கார்டு இரண்டும் சேர்ந்து இயக்கப்பட்டு 10 ரூபாய்க்கு டாக் டைம் மதிப்புடன் இலவசமாக வழங்கப்படும். இது 180 நாட்கள் கால அளவு மதிப்புள்ளதாக இருக்கும். தேவைப்படும் போது வாடிக்கையாளர்கள் பேசும் தொகையை "டாப்அப்' செய்து கொள்ளலாம்.

                     இந்த சிம்கார்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் இயங்கும் இரண்டு பி.எஸ். என்.எல்.,  மொபைல் எண்கள் மற்றும் ஒரு பி.எஸ்.என்.எல்.,  தரைவழி தொலைபேசி எண்ணிற்கும் "குடும்பம் மற்றும் நண்பர்கள்' திட்டத்தின் கீழ்  பேசிக் கொள்ளலாம். இதில் இரண்டு மொபைல் போன்களுக்கும் நிமிடத்திற்கு 30 பைசாவிற்கும், தரைவழி தொலைபேசிக்கு முற்றிலும் இலவசமாக ப்ரீபெய்டு மொபைலிலிருந்து பேசிக்கொள்ளலாம். 

                   வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது ரோமிங் சார்ஜ் தனியாக இல்லை.  மேலும் மாதம் 200 எஸ்.எம்.எஸ்., இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளிக்கும் சிறப்பான பி.எஸ்.என்.எல்., சிம்கார்டுகளை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரும் 30.11.10 வரை மட்டுமே இலவச சிம்கார்டு வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior