சிதம்பரம்:
பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் சிதம்பரத்தில் நவம்பர் 9,10,11 தேதிகளில் நடைபெற்றது.
சிதம்பரம் ரோட்டரி சங்கம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் டாக்டர் என்.சபாநாயகம் நினைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து தெற்குவீதி நகர்புற சுகாதார மையத்தில் இம்முகாமை நடத்தின. இதில் 256 பெண்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். விழாவில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன் வழங்கினார்.
முகாமில் பரிசோதனை செய்த மகளிருக்கு மருத்துவ அறிக்கைகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் எம்.ரத்தினசபாபதி வழங்கிப் பேசினார். செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார். விழாவில் டாக்டர் என்.சபாநாயகம் நினைவு அறக்கட்டளை தலைவர் எஸ்.நடனசபாபதி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், ரோட்டரி முன்னாள் தலைவர் மகபூப்உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக