கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் விதிமுறை மீறி பல அடி ஆழம் வரை மணல் அள்ளுவதால் சிறுவர்கள் பலியாக காரணமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மணல் குவாரி பள்ளத் தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலியான சம்பவம் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பள்ளி விடுமுறை காலங்களில் ஜாலியாக விளையாடி பொழுதை கழிக்க வந்த கிராம சிறுவர்களுக்கு அப்படியொரு கொடூரம் நேர்ந்தது. பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம், பெண்ணாடம், கூடலையாத்தூர், நகர், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக திருக் ண்டேஸ்வரம், கம்மாபுரம் பகுதிகளில் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப் படுகிறது. இந்த மணல் பொக்லைன் மூலம் தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழம் வரைதான் எடுக்க வேண்டும். அவ்வாறு மணல் அள்ளிய பிறகு ஏற்படக்கூடிய பள்ளத்தை மீண்டும் சமன் செய்ய வேண்டும்.
ஆனால் குவாரியில் மணல் அள் ளும்போது அரசு விதித்துள்ள இந்த விதிமுறையை துளிக்கூட பின்பற்றுவதில்லை. மணல் இருக்கும் இடத் தைப் பொறுத்து 10 அடி முதல் 15 அடி ஆழம் வரை மணல் அள்ளுகின்றனர். மழைக் காலத்தில் குவாரியை விட்டு வெளியேறும்போது பள் ளத்தை சமன் செய்யாமலேயே அப்படியே விட்டுவிட்டு வெளியேறி விடுகின்றனர். இதை பொதுப்பணித்துறையும் கண்காணிப்பதில்லை. இதனால் மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி சாதாரண நீச்சல் குளம் போல் காட்சி தருகிறது.
இதை பார்த்த பள்ளி சிறுவர் சிறுமியர் விடுமுறைக் காலங்களில் இயல் பாக குளிப்பதற்காக ஆற்றங்கரைக்கு வருகின்றனர். மணல் அள்ளிய பள்ளத்தை பற்றி சிறிதும் அறியாத சின்னஞ்சிறுசுகள் தாவிக்குதித்து அதிக ஆழத்தில் சிக்கி பலியாகி விடுகின்றனர். ஆற்றுப்படுகையில் இவ்வளவு பள்ளம் இருக் கும் என சிறுவர்கள் சற்றும் எதிர்பாராமல் இறங்குவதால் இந்த விபரீதம் ஏற்படுகிறது. இனியாவது உலகமே அறியாத பிஞ்சு உள்ளங்கள் பலியாவதை தடுக்க மணல் குவாரிகளில் அரசு விதிமுறையை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக