உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 15, 2010

கடலூர் மாவட்ட ஆறுகளில் தடுப்பணை இல்லாததால் மழைநீர் வீணாகிறது : நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை

கடலூர் : 

                   கடலூர் கெடிலம் ஆற்றில் தடுப்பணை இல்லாததால் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

                    கடலூர் நகரின் இருபுறமும் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகள் ஓடுகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பி திறந்து விட்டால் பெண் ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும். இந்நிலையில்  கடந்த வாரம் துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமக விழுப்புரம் மாவட்டம்  கல்வராயன் மலை, திருக்கோவிலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருக்கோவிலூர் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரால் சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி அங்கிருந்து வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கடலூர் அடுத்த மருதாடு பெண்ணையாற்றில் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

                        பெண்ணையாற்றில் இதற்கு பிறகு தடுப்பணை ஏதும் இல்லாததால் மருதாடு தடுப்பணையில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதேப்போன்று கடலூரின் மற்றொரு நதியான கெடிலம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மையனூர் மலையில் உருவாகி 70 கி.மீ., நீளம் கொண்ட சிறு ஆறாகும். மழைக்காலத்தில் மட்டும் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க கடலூர் அடுத்த திருவந்திபுரம் கோவிலுக்கு பின்னால் அணைக் கட்டு உள்ளது. இங்கு தேக்கி வைக்கப்படும் மழை நீரைக் கொண்டு  கடந்த காலங்களில் 4,000  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது திருவந்திபுரம் முதல் கடலூர் வரை விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால் பாசனம் இல்லாததால், திருவந்திபுரம் அணை பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் மழைக் காலங்களில் கெடிலம் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

                    தற்போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக கெடிலம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் மழை நீர் திருவந்திபுரம் அணைக்கட்டு பழுதாகி உள்ளதால் வினாடிக்கு 4,048 கன அடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. கடலூர் அண்ணா பாலத்திற்கு மேற்கு பகுதியில் எந்த இடத்திலும் தடுப்பணை இல்லாததால் கடல் நீர் ஆற்றில் புகுந்ததால் கடலூர் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி அரசிடம் பாடம் கற்குமா தமிழகம் : 

                     கடலூர் பெண்ணையாற்றில் கடலூர் அடுத்த மருதாட்டில் புதுச்சேரி அரசு தடுப்பணை  கட்டியது.  இதன் மூலம் தேக்கப்படும் தண்ணீரை புதுச்சேரி அரசு வாய்க்கால் வழியாக ஏரியில் நிரப்பி ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றனர்.

                      அதேப்போன்று தற்போது கடலூர் அடுத்த கும்தாமேடு பகுதி பெண்ணையாற்றில் புதிதாக தடுப்பணையை புதுச்சேரி அரசு கட்டி வருகிறது. இந்தப் பணி முடிவடைந்தால் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம், சாவடி, கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி அரசின் புண்ணியத்தில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். ஆனால் கெடிலம் ஆற்றின் குறுக்கே திருவந்திபுரத்தில் உள்ள அணையை முறையாக பராமரிக்காததால் மழைக் காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கிறது. பெண்ணையாற்றில் 15 கி.மீ., தூரத்தில் இரண்டு தடுப்பணைகளை கட்டியுள்ள புதுச்சேரி அரசின் செயல்பாட்டை பார்த்தாவது தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior