உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 30, 2010

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வு

சிதம்பரம்:

                   சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவத்தின் மகன் ராஜேஷ், டிசம்பர் மாதம் விருதுநகரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                       இவர் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தினசரி வீடுகளிலும், டீக்கடைகளிலும் வீணாக வெளியில் கொட்டப்படும் டீத்தூள் கழிவுகளை மக்கச்செய்து உரமாக பயன்படுத்தினால் நல்ல விளைச்சலைப் பெறலாம் என்பது மாணவர் ராஜேஷின் கண்டுபிடிப்பாகும்.

               சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற கடலூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று "வீணாகும் பொருளிலிருந்து வளம் காணலாம்" என்ற தலைப்பிலான இவரது காட்சிப் பொருள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது." 

                   விவசாய தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இவரது காட்சிப் பொருள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர் ராஜேஷ் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் எம்.கே.பன்னீர்செல்வம், எம்.சிவகுரு, ஜே.பி.சங்கரன், என்.சுரேஷ்குமார் ஆகியோரை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் ரத்தின.பாலசுப்பிரமணியன், ரத்தின. திருநாவுக்கரசு, தலைமைஆசிரியர் ஆர்.ரவிசங்கர் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior