நேற்று (29/11/2010) சிறு பிரச்னை, அதை மறக்க நீண்ட நாட்களுக்கு சினிமா செல்லலாம் என்று நினைப்போடு திரை அரங்கத்திற்கு சென்றேன். கடந்த வாரம் திரையிடப்பட்ட நந்தலாலா திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு கிடைத்தது.
திரைப்படம் தொடங்கியதிலிருந்தே ஒரு சின்ன எதிர்பார்ப்பு, கதையும் கதைக்கான கருப்பொருளும் சற்று வித்தியாசமானதாய் அமைந்திருந்தது.
கதையின் சுருக்கம்:
தாயை தேடி செல்லும் ஒரு ஐந்து வயது பள்ளி சிறுவன் அந்த சிறுவனுக்கு உதவியாக ஒரு மன நலம் சரியில்லாத ஒரு மனிதர். தாயை தேடி செல்லும்வழியில் அச்சிறுவனும் மன நலம் சரியில்லாத மனிதரும் சந்திக்கும் நபர்கள், பிரச்சனைகள்தான் கதையின் சுருக்கம். தாயின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு குழந்தையின் உணர்வுகளை அழகாக இயக்குனர் சொன்னவிதம் சற்றே வித்தியாசம்.
நம் தளத்தின் வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்
பிரமாண்டம் எனும் பெயரில் கோடி கோடியாய் செலவழித்து தமிழ் சினிமாவை சிதைப்பவர்கள் மத்தியில் இதுபோல் உணர்வின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு சில படங்களை வரவேற்போம், உங்களால் முடிந்தால் இந்த படத்தை பார்த்து உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்.
படம் முடிந்து வெளியில் வந்த பிறகு என் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்தது.
படத்தை பார்க்கும் ஆவல் உங்கள் விமர்சனத்தை படிக்கும்போது எழுகிறது கார்த்தி. தொடரட்டும் உங்கள் விமர்சனங்கள்.
பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்தது என சொல்லியுள்ளது உள மகிழ செய்தது.