உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 07, 2010

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; 13-ந்தேதி தொடங்குகிறது

சிதம்பரம்

              கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்தரா தரிசனம் நடந்து வருகிறது.

              இந்த ஆண்டுக்கான ஆருத்ராதரிசனம் வருகிற 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியரால் கொடியேற்றபடுகிறது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், இரவு தங்கம், வெள்ளி மஞ்சங்களில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 14-ந் தேதி இரவு வெள்ளி, சந்திரபிரபை வாகனத்திலம், 15-ந்தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 16-ந் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் 17-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் தெருவடைச்சானில் வீதி உலா நடக்கிறது.

             18-ந் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 19-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 20-ந் தேதி மாலை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வேடத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணியளவில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சித்சபையிலிருந்து தேருக்கு எழுந்தருளிகிறார். அதன்பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் வீதி உலா வருகின்றனர்.

              வருகிற 22-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், 10 மணிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும், அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்தி விழாவும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
23-ந் தேதி இரவு முத்து பல்லக்கில் வீதி உலாவும், 24-ந் தேதி இரவு ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior