கடலூர்
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டம், மறுவாய் கிராமத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு, குறிஞ்சிப்பாடியில் உயிரிழந்த 3 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், மழை வெள்ளத்தால் உயிரிழந்த 5 கால்நடைகளுக்கு ரூ.45 ஆயிரம் நிவாரண உதவிகளையும், முழுவதும் சேதமடைந்த 271 வீடுகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 13 லட்சத்து 55 ஆயிரத்துக்கான காசோலையும், தலா 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்எண்ணை, வேட்டி, சேலை ஆகிய உதவிகளை வழங்கினார்.

பின்னர் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது:-
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் அமைச்சர்களும், மாவட்ட கலெக்டர்களும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் வெள்ளச்சேத விவரங்களை சேகரிக்க, அரசு உயர் அதிகாரிகளை அனுப்பி 2 நாட்களாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 1000 கிலோ மீட்டர் சேதம் அடைந்துள்ளது. இதுவரை 90 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. மழையின் காரணமாக 10 பேரும், 120 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
இம்மாவட்டம் முழுவதும், 2000 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 8 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சேதம் குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மு.க. ஸ்டாலினிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் ஆகியோர் கடலூர் மாவட்ட வெள்ள சேதங்கள் குறித்து புகைப்படங்களுடன் விளக்கினர்.
உயர் கல்வித்துறை, கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, சிறப்பு அலுவலர் ககன்தீப் சிங்பேடி, மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், துரை.ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக