உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 25, 2010

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் கரும்பு டன்னுக்கு ரூ.1900: பொது மேலாளர் துரைசாமி

திட்டக்குடி:

           அம்பிகா சர்க்கரைஆலையில் கரும்பு டன்னுக்கு ரூ.1900 வழங்கப்படும் என்று பொது மேலாளர் துரைசாமி கூறியுள்ளார்.  

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலைன் முதுநிலை பொது மேலாளர் துரைசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது:-
 

               இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. நடப்பு 2010-2011 அரவை பருவத்தில் கரும்பிற்கு டன் 1-க்கு ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்படும்.  இது சென்ற ஆண்டை விட டன்னுக்கு 199 ரூபாய் கூடுதலாகும். கரும்பு போக்குவரத்து வாடகை முழுவதையும் ஆலை நிர்வாகம் ஏற்கும். இந்த அரவை பருவத்தில் 4 அடி மற்றும் 5 அடிக்குமேல் பயிரிடப்பட்டுள்ள கரும்பை அறுவடை செய்ய கரும்பு வெட்டும் எந்திரங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

               ஆலை பகுதியில் தற்போது 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு கூடுதல் மகசூல் கொடுக்கும் நிலையில் உள்ளது. நிலத்தடி சொட்டு நீர்பாசனம் அமைப்பதற்கு முதலாண்டு 4000 ரூபாய் எனவும், அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2250 ரூபாய் எனவும் மகசூல் அடிப்படையில் ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் நிலத்துக்கு மேல் சொட்டு நீர் பாசனம் அமைப்பவர்களுக்கு முதலாண்டு 2500 ரூபாய் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 1500 ரூபாய் எனவும் மகசூல் அடிப்படையில் ஆலை நிர்வாகம் சார்பில் மானியம் வழங்கப்படும்.

               இத்துடன் அரசு அறிவித்துள்ள மானியமும் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். இன்றைய சூழ்நிலையில் கரும்பு சாகுபடியில் மிக அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்தும். கட்டை விட்டும் பயன் பெற கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior