கடலூர்:
கூட்டுறவுத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் 20 இடங்களில் பெல்லாரி வெங்காய விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டதாக, கூட்டுறவு இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் தெரிவித்தார்.
கிலோ ரூ.22-க்கு விற்கப்பட்டது. பெல்லாரி வெங்காய விலை ஏற்றத்தைத் தடுக்க தமிழக அரசின் அறிவிப்புக்கு இணங்க கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 20 இடங்களில் வியாழக்கிழமை வெங்காய விற்பனை தொடங்கப்பட்டது. கூட்டுறவு பண்டகசாலை (கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்) மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக