உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு: 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

               வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, ஏழு லட்சத்து 30 ஆயிரத்து 628 மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த தேர்வை விட, 40 ஆயிரத்து 941 பேர் கூடுதலாக தேர்வில் பங்கேற்கின்றனர்.

           தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வை நடத்துவதற்கான பணிகளை, தேர்வுத்துறை மும்முரமாக கவனித்து வருகிறது. இதற்கிடையே, மாவட்டம் முழுவதும் இருந்து தேர்வெழுதும் மாணவ, மாணவியர் விவரம் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. 

               அதன்படி, இந்த தேர்வை ஏழு லட்சத்து 30 ஆயிரத்து 628 பேர் எழுதுகின்றனர். இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர்; மாணவியர் மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 200 பேர். கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 பேர் எழுதினர். இவர்களில், மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 381 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 306 பேர் மாணவியர். 

                       கடந்த தேர்வை விட, மாணவர்கள் 16 ஆயிரத்து 47 பேரும், மாணவியர் 24 ஆயிரத்து 894 பேரும் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். ஒட்டு மொத்தத்தில், 40 ஆயிரத்து 941 பேர் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior