உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், ஜனவரி 05, 2011

கடலூரில் சாலைகள் அமைக்க மேலும் ரூ. 10 கோடி ஒதுக்கீடு

டலூர்:

              கடலூரில் சாலைகள் அமைக்க தமிழக அரசு மேலும் ரூ. 10 கோடி வழங்கி இருப்பதாக, நகராட்சித் தலைவர் து.தங்கராசு திங்கள்கிழமை தெரிவித்தார்.  கடலூர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் து.தங்கராசு தலைமையில்  திங்கள்கிழமை நடந்தது.

               கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதுப்பிக்க ஏற்கனவே, சிறப்பு சாலைத் திட்டத்தில் தமிழக அரசு ரூ.10.1 கோடி அனுமதித்தது. இப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் மேலும் ரூ.10 கோடியை அரசு வழங்கி உள்ளது.  இதுதொடர்பாக சாலைப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் தலைவர் தங்கராசு கூறியது:  

              முன்னதாக 25.2 கி.மீ. நீளச் சாலைகள் அமைக்க நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. 25 பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பிப்ரவரி மாதத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.  தற்போது மேலும் ரூ. 10 கோடி வழங்கப்பட்டு உள்ளதால்  72 சாலைகள் அமைக்கப்படும். அதில் 71 சாலைகள் சிமெண்ட சாலைகளாக இருக்கும். ஒன்று மட்டும் தார்ச்சாலை. இச்சாலைப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். 

                   மார்ச் மாதத்துக்குள் 65 கி.மீ. நீளச் சாலைகள் முடிவடையும். ஏற்கனவே 45 கி.மீ. நீளச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு விட்டன.   மழை, வெள்ளத்தால் 14 கி.மீ. நீளச் சாலைகள் சேதம் அடைந்தன. அவற்றை புதுப்பிக்க அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கி இருக்கிறது என்றார் தங்கராசு.  கூட்டத்தில் நகராட்சி ஆணையர் இளங்கோவன், துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior