கடலூர் :
கடலூரில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 16 பேருக்கு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொழில் தொடங்க கலெக்டர் கடனுதவி வழங்கினார்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 325 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் 16 இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்டோ, வேன், கார் ஆகியவை வாங்கி தொழில் செய்ய மானித்துடன் கூடிய வங்கிக் கடனாக 45 லட்சத்து 6 ஆயிரத்து 32 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார்.
தேசிய அறக்கட்டளை கடலூர் மாவட்ட குழு மூலம் மன வளர்ச்சி குன்றிய சிதம்பர வட்டத்தைச் சேர்ந்த 28 மாற்றுத் திறனாளிகளுக்கு 67 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிரமைய காப்பீடு திட்ட அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன் பங்கேற்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக