உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 25, 2011

நெய்வேலியில் தங்க இடமின்றி தவிக்கும் தியாகி காளமேகம் குடும்பம்


மழையினால் சேதமடைந்த வீட்டின் முன் நிற்கும் தியாகி காளமேகத்தின் மனைவி பூங்காவனம்.
 
நெய்வேலி:

         நெய்வேலியில் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தியாகி காளமேகத்தின் குடும்பத்தினர் தற்போது தங்க இடமின்றியும், அரசின் உதவி எதுவுமில்லாமல் பரிதாப நிலையில் இருந்து வருகின்றனர்.  

          நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகி காளமேகம், 50 ஆண்டுகளுக்கு முன் நெய்வேலிக்கு வந்து, சிறிதுகாலம் என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.  இவருக்கு பூங்காவனம் எனும் மனைவியும், ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். இவர் ஓய்வுபெற்ற பின், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் கடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் வசித்துவந்த போது, கடந்த 2007-ம் ஆண்டு இறந்தார்.  

            இவரது மறைவை அறிந்த மாவட்ட நிர்வாகம், தியாகிக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில், விருத்தாசலம் வட்டாட்சியரை அனுப்பிவைத்து இறுதி மரியாதை செய்தது.  இதையடுத்து தியாகியின் மனைவி பூங்காவனத்துக்கு, தியாகிக்கு அளிக்கப்படும் பென்ஷன் ரூ.2500, சிவகங்கை மாவட்டக் கருவூலத்திலிருந்து மாதாமாதம் கிடைத்து வருகிறது.  தியாகியின் இரு மகன்களில் ஒருவர் என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

                     மற்றொரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும், போதிய வருவாயின்றி குடும்பத்தை சிரமத்துடன் கவனித்து வருகிறார்.÷அனைவரும் மந்தாரக்குப்பம் சாலையோரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்த வந்தனர். இந்நிலையில் அண்மையில் பெய்த மழையில், அவர்களது குடியிருப்பு இடிந்து விழுந்ததில் முற்றிலும் சேதமடைந்தது.  மழையினால் சேதமடைந்த வீட்டுக்கு, அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.2500-ல், தியாகியின் குடும்பம் என்று கூட பார்க்காமல், அந்த நிவாரணத் தொகையில் ரூ.500-ஐ பிடித்தம் செய்துகொண்டுதான் வழங்கியுள்ளார் 

               வடக்குவெள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்.  போதிய வருவாயின்றி, அரசு வழங்கும் ரூ.2500 பென்ஷன் தொகையைக் கொண்டு, ஒரு குடும்பம் தற்போதுள்ள விலைவாசி நிலவரப்படி வாழ முடியுமா? தங்கியிருந்த குடியிருப்பும் வசிக்க தகுதியற்ற நிலையில்  உள்ளதே?.  ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினவிழாவின் போது, அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தியாகிகளை அழைத்து ஒரு சால்வை அணிவித்து கெüரவப்படுத்துவதோடு, அரசின் வேலை முடிந்துவிடுகிறது.

             நாட்டுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகிகளையோ அவர்களது குடும்பங்களின் நிலையைப் பற்றியோ, அவர்களுக்கு உதவ வேண்டுமே என்ற எண்ணமோ அரசுக்கு ஏன் தோன்றவில்லை. குறைந்தபட்சம் அவர்களது துணைவியாருக்காவது அரசு உதவிட வேண்டாமா?  யார் யாருக்கோ இலவச நிலம், சமத்துவபுரத்தில் குடியிருப்பு உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கிவரும் தமிழக அரசு, இது போன்ற தியாகிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச நிலமோ, சமத்துவபுரத்தில் குடியிருப்போ வழங்குவது குறித்து பரிசீலிக்கலாமே?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior