உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், ஜனவரி 25, 2011

தமிழகத்தில் 40 மருத்துவமனைகளில் சிசு பராமரிப்பு மையம் ; அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:

           கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை களை விளக்கும் வகையில் பல்துறை பணி விளக்க கண்காட்சி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டள்ளது.

          இந்த கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல். ஏ., கடலூர் நகர் மன்ற தலைவர் தங்கராசுகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் முத்தையா வரவேற்றார். நகர்மன்ற தலைவர் தாமரைச் செல்வன் வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் எம்.ர்.கே. பன்னீர் செல்வம் கல்நது கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பேசினார்.

அமைச்சர் எம்.ர்.கே. பன்னீர் செல்வம்  பேசியது:-


                 செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் விதத்தில் குறுகிய நாட்களில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு களிக்க வேண்டும். அங்கு உள்ள 24 ஸ்டால்களில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எந்த அரசும் செய்யாத சாதனைகளை செய்து வரும் தமிழக அரசின் ஒவ்வொது துறை திட்டமும் மக்களிடையே நேரடியாக செல்கிறது.

                அதாவது மருத்துவ துறையில் சாதனை, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் சாதனை, மீனவர், கூட்டுறவுதுறை என அந்தந்த துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை செய்து வருகிறது.   குழந்தை சிசுக்கள் இறப்பு விகிதம் இந்தியாவிலே தமிழகத்தில் தான் குறைவு. இதனை மேலும் குறைக்கும் விதத்தில் பிறந்த குழந்கைதளுக்கு 1 வயதாகும் வரை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையினை தனியார் மருத்துவமனையிலும் இலவசமாக பெறலாம். அதைப்போன்று தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 40 மருத்துவமனையில் சிசு பராமரிப்பு மையம் தொடங்கப்பட உள்ளது.

                 அதன்படி கடலூர் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும். இதற்கென்று சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து விழா மேடையில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சாய்பாபா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior