கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை, கடலூர் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை சுத்தம் செய்தனர்.
உப்பங்கழிகள், சவுக்குத் தோப்புகள், மணல் குன்றுகள், பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் படகுத் துறையுடன் அழகிய தோற்றம் கொண்டது, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச். வடகிழக்குப் பருவமழை காலத்தில் இக்கடற்கரை கெடிலம் ஆற்று வெள்ளப்பெருக்காலும் ராட்சத அலைகளாலும் சிதைந்து காணப்பட்டது.
அத்துடன் பொங்கல் பண்டிகையின் வரவைத் தொடர்ந்து, கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால், கடற்கரை முற்றிலும் அசுத்தமாகி விட்டது. பாலித்தீன் பைகள், காகிதக் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன. இதைச் சுத்தம் செய்யும் பணியை கடலூர் இளைஞர் எக்ஸ்னோரா சனிக்கிழமை மேற்கொண்டது. இப்பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் முன்னிலை வகித்தார். புனித வளனார் கல்லூரி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ÷கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் 100 பேர் ஈடுபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக