உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

         கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை முடிவடையும் காலாண்டிற்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.
 
கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

            பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தவறியவர்கள், பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்து, தொடர்ச்சியாக புதுப்பித்து வந்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்களுக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு, தனியார் அலுவலகத்தில் பணிபுரிபவராகவோ, கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ இருக்கக்கூடாது. தொலைதூரக் கல்வி படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் படித்தவராகவோ, பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 15 ஆண்டு வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

               கல்வி அசல் சான்றுகள், வேலை வாய்ப்பு அலுவலக அசல் அட்டையுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பதிவு செய்து 5 ஆண்டு முடித்த புதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்டவை பிப்ரவரி 15ம் தேதி வரை பெறப்படுகிறது. உதவித் தொகை பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் சுய உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். 

              மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து உதவித் தொகை பெறாதவர்கள் 2010 -11ம் ஆண்டு சுய உறுதி மொழி ஆவணத்துடன், வேலைவாய்ப்பு அடையாள அட்டை புதுப்பித்த ஆதாரத்துடன், இதுவரை பயன் பெற்ற வங்கி புத்தகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணம் அனுப்பிய விவரங்களின் நகலை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior