கடலூர்:
பண்ருட்டியை அடுத்த சேர்ந்தநாடு கிராமத்தின் அருகே கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கனிம வள உதவி இயக்குனர் முருகானந்தம் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்தனர். பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே அவர்கள் “திடீர்” வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், சேர்ந்தநாடு கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதி யின்றி மணல் அள்ளி கடத்தி வந்த 3 லாரிகள் சிக்கின. அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக