உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 17, 2011

சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் கடலூரில் போட்டியிட வேண்டும்: தி.மு.க. மாணவரணி தீர்மானம்

கடலூர்:
 
             துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று, கடலூர் தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
               ராணி மேரி கல்லூரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின் கடலூர் மத்திய சிறையில் 13 நாள்கள் அடைக்கப்பட்டு இருந்தார். இதேபோல் மு.க. ஸ்டாலின் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளுக்கும் கடலூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும். 
 
 மாவட்டம் முழுவதும் கிராமங்கள்தோறும் மாணவரணியினர் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது. 
 
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், 
 
ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல், 
 
அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்தல், 
 
மருத்துவ முகாம்கள் நடத்துதல், 
 
மரங்கள் நடுதல், 
 
மாணர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், 
 
விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் 
 
உள்ளிட்ட பணிகளைச் செய்வது, 
 
மாவட்டம் முழுவதும் சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வது, 
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், முதல்வர் கருணாநிதிக்கு எதிராவும் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
                 கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைபபாளர் கு,வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வேல்முருகன், குபேந்திரன், விஜயகுமார், சிவா, கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior