உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 04, 2011

கடலூர் மாவட்டத்தில் 1,124 பேருக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் ஒப்படைப்பு: கலெக்டர் தகவல்

பரங்கிப்பேட்டை : 

               கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 1,124 பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஐ.ஓ.பி., வங்கி சார்பில் உயர்கடன் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் வீர ராகவ ராவ் முன்னிலை வகித்தார். ஐ.ஓ.பி., வங்கி முதுநிலை மேலாளர் பாண்டியதுரை வரவேற்றார். 

விழாவில் கலெக்டர் பேசியது: 

             கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 26 ஆயிரத்து 119 வீடுகளும், இரண்டாம் கட்டமாக 33 ஆயிரத்து 508 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1124 வீடுகள் முழுமையாக கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன் பணம் இல்லாததால் பயனாளிகள் வீடுகள் கட்டமுடியாத நிலையில் உள்ளதால் அவர்களுக்காக கடன் உதவி கேட்டு பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

               பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.ஓ.பி., வங்கி 25 பயனாளிகளுக்கு குறைந்த வட்டியில் தலா 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 250 பயனாளிகளுக்கும் கடன் உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அதற்காக ஐ.ஓ.பி., வங்கி அதிகாரிகளை பாராட்டுகிறேன். இவ்வாறு கலெக்டர் பேசினார். விழாவில் புதுச்சேரி முதன்மை மண்டல மேலாளர் நடராஜன், ஒன்றிய ஆணையாளர்கள் துரைசாமி, சந்திரகாசன், பு.முட்லூர் வங்கி மேலாளர் வேலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபு, பாலகுரு உட்பட பலர் பங்கேற்றனர். ஐ.ஓ.பி., வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேசவன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior