உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 04, 2011

"இசாட்' மாதாந்திர ரயில் பாஸ் பெற புகைப்பட அடையாள அட்டை அவசியம்

           ஏழைத் தொழிலாளர்கள் "இசாட்' மாதாந்திர ரயில் பாஸ்களை பெறுவதற்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

              கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், அமைப்புசாராத ஏழைத் தொழிலாளர்களின் நலன் கருதி, சிறப்புச் சலுகையாக  ரூ. 25 மட்டும் செலுத்தினால் "இசாட்' திட்டத்தின் கீழ் மாதாந்திர ரயில் பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதே ஆண்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாத வருமானம் ரூ. 1,500-க்கு மிகாமல் உள்ள அமைப்புசாராத தொழிலாளர்கள் 100 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ரயில்களில் பயணம் செய்ய இந்த இசாட் ரயில் பாûஸப் படுத்தலாம்.  இந்த பாஸ்களைப் பெற இப்போது குறிப்பிட்ட சில விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விவரம்:

               விண்ணப்பதாரரிடம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் இருக்க வேண்டும்.  அசலான வருமானச் சான்றிதழில் மாவட்ட நீதிபதி, இப்போதைய மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், வறுமைக்கோட்டுக் கீழே வசிப்போருக்கு மாநில அரசு வழங்கிய அட்டை ஆகிய ஏதேனும் சான்றுரைக்கப்பட வேண்டும்.  "இசாட்' பாஸ் பெற்ற தொழிலாளர்கள் தங்களது பயணத்தின்போது, "இசாட்' மாதாந்திர பாஸ், சான்றுரைக்கப்பட்ட வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும். இது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior