உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, பிப்ரவரி 04, 2011

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி: நிதி ஒதுக்கியும் விடுதி கட்டடம் இல்லை

கிள்ளை : 
              சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி கட்ட நிதி ஒதுக்கியும் கட்டப்படாததால் ஆண்டுக்கு 1.47 லட்சம் ரூபாய் அரசுக்கு விரயம் ஏற்பட்டு வருகிறது.
               சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு விடுதி கேட்டு மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விடுதி துவங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் போதுமான இடம் இருந்தும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இளங்கலை மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கல்லூரி வளாகத்தில் விடுதி கட்ட ஆதிதிராவிடர் நலத்துறைமூலம் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 
               ஆனால், இன்று வரை விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் சிதம்பரம் பகுதியில் மாத வாடகை 12 ஆயிரத்து 250 ரூபாய்க்கு வாடகை கட்டடத்தில் விடுதி இயங்கி வருகிறது. கல்லூரி வளாகத்தில் விடுதி கட்ட நிதி ஒதுக்கி ஓர் ஆண்டாகியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கட்டப்படாததால் ஆண்டுக்கு 1.47 லட்சம் ரூபாய் அரசுக்கு விரயம் ஏற்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior