உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 15, 2011

வி.ஏ.ஓ. தேர்வுக்கு ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்

           வி.ஏ.ஓ., தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

           பிப்., 20 ல் காலை வி.ஏ.ஓ., தேர்வு நடக்கிறது. இதற்காக, 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு, டி.என்.பி.எஸ்.சி., ஹால் டிக்கெட்டுகளை அனுப்பியுள்ளது. குறைந்த வயதினர் உட்பட தகுதியில்லாத 85 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படுகிறது. 

            தேர்வு தேதி நெருங்கிவிட்டதால், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், கலக்கம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் மூலம் www.tnpsc.gov.in பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. விண்ணப்பத்தின் எண்களையோ அல்லது பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior